‘மறக்கவும் மாட்டோம்;  மன்னிக்கவும் மாட்டோம்!’ - சிஆர்பிஎஃப் ஆதங்கம் | This heinous attack will be avenged says CRPF

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/02/2019)

கடைசி தொடர்பு:14:35 (15/02/2019)

 ‘மறக்கவும் மாட்டோம்;  மன்னிக்கவும் மாட்டோம்!’ - சிஆர்பிஎஃப் ஆதங்கம்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எஃப்

இந்தத் தாக்குதலுக்கு, இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உலக நாடுகளும்  ‘தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் ‘எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானைக் கண்டித்து, காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக சிஆர்பிஎஃப்-பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளது. அதில், “ ''மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.'' புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களுக்கு வீர வணக்கங்கள். அவர்களின் குடும்பத்துக்கும், சகோதர சகோதரிகளுக்கும் நாங்கள் எப்போதும் உடனிருப்போம். இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப் பழிதீர்க்கப்படும்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close