`பொறுத்தது போதும்...!’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம் | rajini condemns the barbaric act in pulwama kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:28 (15/02/2019)

`பொறுத்தது போதும்...!’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்

 புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். 

ரஜினி

காஷ்மீரில், ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள்  நிரப்பிய காரைக் கொண்டு மோதியதில், 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது மக்கள் தொடர்பாளர் மூலம் அளித்துள்ள அறிக்கையில், ``காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொறுத்தது போதும்... இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.     

புல்வாமா

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புலவாமா பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற 22 வயது தீவிரவாதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். 


[X] Close

[X] Close