‘தீவிரவாதம் தெற்காசிய பிராந்தியத்தின் புற்றுநோயாக மாறிவருகிறது’ - உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் | World leaders condemns pulwama terrorist attack

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (16/02/2019)

கடைசி தொடர்பு:10:06 (16/02/2019)

‘தீவிரவாதம் தெற்காசிய பிராந்தியத்தின் புற்றுநோயாக மாறிவருகிறது’ - உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

ம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா நகரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

புல்வாமா தாக்குதல்

இந்த பயங்கரவாதத் தாக்குதல்குறித்து இலங்கைப் பிரதமர் இரணில் விக்ரமசிங்கே  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடந்துள்ள இந்த பயங்கரவாதத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 1989ல் இருந்து நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல்களில் இதுவே மிகவும் மோசமானது. உயிரிழந்துள்ள இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

அதேபோல, புல்வாமா தாக்குதல்குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, “ காஷ்மீரில் நடந்துள்ள இந்த  பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலால், உயிரிழந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வேகமாக உடல்நலம் திரும்ப வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

புல்வாமா

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, “ தீவிரவாதம் தெற்காசிய பிராந்தியத்தின் புற்றுநோயாக மாறி வருகிறது. இந்த பயங்கரவாதங்களை வேருடன் அழிப்பதற்குக் கூட்டுமுயற்சி தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 


[X] Close

[X] Close