நில மோசடி புகார் - ராபர்ட் வதேராவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை! | Ed attaches robert vadras assets  worth over 4 crore

வெளியிடப்பட்ட நேரம்: 08:22 (16/02/2019)

கடைசி தொடர்பு:08:22 (16/02/2019)

நில மோசடி புகார் - ராபர்ட் வதேராவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் நகரில் நிலம் விற்பனை செய்ததில் மோசடி நடந்துள்ளதாக,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின்  4.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

ராபர்ட் வதேரா

ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் மூலமாகக் கடந்த 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் பகுதியில்,  66.55 ஹெக்டேர் அளவிலான நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர், அதேநிலம் அதிகப்படியான விலைக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இந்த நில விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகித்து அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

photo credit: @WithRV

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, இந்த வழக்கின் விசாரணைக்காக, ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் ராபர்ட் வதேரா தன் தாயுடன் ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக, வதேராவும் அவருடைய தாயாரும் இயக்குநராக உள்ள ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்திற்கு  4.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.


[X] Close

[X] Close