`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்?' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு | 90 percent of child labourers in Telangana are from SC/ST communities

வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (17/02/2019)

கடைசி தொடர்பு:09:18 (17/02/2019)

`குழந்தை தொழிலாளர்களில் 90% பேர் பட்டியலினத்தவர்கள்?' - அதிர்ச்சி கொடுக்கும் தெலங்கானா அரசு ஆய்வு

தெலங்கானாவில் உள்ள குழந்தை தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை தொழிலாளர்

''குழந்தை தொழிலாளர்கள் முறையைத் தடுக்க இந்தியாவில் தனி சட்டமே ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் மாறினாலும் குழந்தை தொழிலாளர்கள் விஷயத்தில் ஒரு முழுமையான தீர்வு என்பது இல்லாமலே இருக்கிறது. இதற்குச் சாட்சியாக தான் தெலங்கானாவில் நடந்த ஆய்வில் தெரிய வைத்துள்ள உண்மை. தெலங்கானா அரசின் தொழிலாளர் நலத்துறை சமீபத்தில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 9,724 குழந்தை தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 

குழந்தை தொழிலாளர்

இந்த ஆய்வின் முடிவில், இந்த 10 மாவட்டங்களில் இருந்து 6-8 வயதுடைய 15 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 9-14 வயதுடைய குழந்தை தொழிலாளர்கள் 1,605 பேரும், குழந்தை தொழிலாளர் சட்டம் 2016ன் படி இளம் பருவத்தினர் என வரையறுக்கப்பட்டுள்ள 15 - 18 வயதிற்குள்ளான சிறுவர்கள்  8,105 பேரும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 9,724 குழந்தை தொழிலாளர்களில் யாருமே பள்ளிக்குச் செல்லவில்லை என்பதைத் தாண்டி, இவர்களில் பெரும்பாலானோர் அதாவது 90 சதவிகித குழந்தைகள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து தொழிலாளர்களாக இருப்பது  தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மலைபிரேதேச மாவட்டமான விகாராபாத்தில் தான் அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 3,077 குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்

ஆய்வு குறித்து தெலங்கானா தொழிலாளர் துறை அதிகாரி கூறுகையில், ``இந்த மொத்த குழந்தை தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள். பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளே அதிக அளவில் தொழிலாளர்களாக உள்ளனர். இதைக் கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. இது ஒரு மாதிரி ஆய்வு தான். முழுமையான ஆய்வு நடைபெறும் போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பட்டியலின சமூக குழந்தைகள் மட்டும் ஏன் குழந்தை தொழிலாளர்களாக இருக்கிறார் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. உயர் சாதிகளில் ஏழை மக்கள் இல்லை எனக் கூற முடியாது. ஆனால் அவர்கள் குழந்தைகள் யாரும் தொழிலாளர்களாக இல்லை" என்றார். 

குழந்தை தொழிலாளர்

அந்த அதிகாரி எழுப்பியுள்ள கேள்வி தெலங்கானா மாநிலத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள் என்பதைத் தாண்டி கல்வி உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதால் தான் 90 சதவிகித பட்டியலின குழந்தைகள் தொழிலாளர்களாக இருக்கின்றனர் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

news credit: thenewsminute

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close