சி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி! - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் | central minister took selfie at martyr's funeral sparks irk

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:22 (18/02/2019)

சி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி! - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் ஒருவர் செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில், 78 வாகனங்களில் 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சுமார் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய கார், சி.ஆர்.பி.எஃப் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது மோதி வெடித்தது. இந்த கோரத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

அமைச்சர்

இதனிடையே கேரளா மாநிலம், வயநாடு அருகில் உள்ள திரிகை பேட்டா கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் அல்போன்ஸ், கேரள சி.ஆர்.பி.எஃப் வீரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். அப்போது அவர் ராணுவ வீரரின் உடலுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். இதை சமூகவலைதளத்தில் பகிர்ந்த அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் ஒருவரின் இந்தச் செயல் வெட்கப்படவைப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


[X] Close

[X] Close