`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை!’ - உளவுத் துறை முன்னாள் தலைவர் | Raw former chief Vikram sood speaks about Pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:38 (18/02/2019)

`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை!’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்

``பாதுகாப்புக் குறைபாடு ஏதோ ஒரு இடத்தில் ஏற்படாமல் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற சாத்தியம் இல்லை'' என உளவு அமைப்பான `ரா’ -வின் (RAW) முன்னாள் தலைவர் விக்ரம் சூத் கருத்து தெரிவித்திருக்கிறார். 

`ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் சூத்

Photo Credit: ANI

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இதுபோன்ற தாக்குதல்கள் சாத்தியமே இல்லை என ரா அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் சூத் கருத்து தெரிவித்திருக்கிறார். 

புல்வாமா தாக்குதல்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பது உறுதியாகிறது. வெடிகுண்டுகளை ஒருவர் வாங்கியிருக்கிறார். அதை ஒருவர் ஒருங்கிணைத்திருக்கிறார். அதேபோல், சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் செல்லும் வழி குறித்து அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 

புல்வாமா தாக்குதல்

Photo Credit: ANI

எந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டிருக்கலாம். அதேபோல், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஒருவரைத் தேர்வு செய்து, இந்தத் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். ஏதோ ஒரு இடத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்படாமல் இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு சாத்தியமே இல்லை. எந்த இடத்தில் குறைபாடு ஏற்பட்டது என்பது குறித்து இப்போது கருத்துக் கூற முடியாது’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். 


[X] Close

[X] Close