சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கும் அமிதாப் பச்சன் | Amitabh Bachchan to donate five lakh rupees each for matryed CRPF soldiers families

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:48 (18/02/2019)

சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கும் அமிதாப் பச்சன்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவியாக அளிக்க இருக்கிறார் பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன். 

அமிதாப் பச்சன்

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய காரைக் கொண்டு ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு தரப்பினரும் உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை வீரேந்திர சேவாக் சர்வதேச பள்ளி மூலம் ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்திருக்கிறார். 

புல்வாமா தாக்குதல்


இந்தநிலையில், வீரர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இந்தத் தகவலை உறுதிசெய்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர், நிதி உதவி அளிப்பது குறித்து அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ஆலோசித்து வருவதாகவும், ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் நிதி உதவி சரியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அரசு மூலம் உரிய முறையில் அவர்களுக்கு நிதி உதவி சென்று சேர்க்கப்படும் என்றும் அமிதாப் பச்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  
 


[X] Close

[X] Close