200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள் குழு! | over 200 pakistan websites hacked after Pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:08:59 (18/02/2019)

200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள் குழு!

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்திய ஹேக்கர்கள் குழு முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹேக்கிங்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ -முகமது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த அனுசரணையான நாடு (MFN) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதேபோல், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான இறக்குமதி வரியையும் இந்தியா 200 சதவிகிதமாக அதிகரித்தது. `இது கோழைத்தனமான தாக்குதல்’ என்று கூறி பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

முடக்கப்பட்ட பாகிஸ்தான் அரசின் இணையதளம்


இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்திய ஹேக்கர்கள் குழு முடக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த இணையதளங்களில் `14/02/2019-ஐ மறக்க மாட்டோம்’, `உயிரிழந்த வீரர்களின் தியாகத்துக்குச் சமர்ப்பிக்கிறோம்’ உள்ளிட்ட வாசகங்களுடன் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. முடக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பெரும்பாலானாவை பாகிஸ்தான் அரசின் இணையதளங்களாகும். 

புல்வாமா தாக்குதல்

இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் முகமது பாஸில், ``பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளம் சரியாக இயங்கவில்லை என பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close