புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்! | The 4 Army personnel were killed in encounter between terrorists and security forces in Pulwama

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (18/02/2019)

கடைசி தொடர்பு:10:03 (18/02/2019)

புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்!

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உலகநாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

புல்வாமா தாக்குதல்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் நடந்த வடுகூட இன்னும் ஆறாத நிலையில், நேற்று இரவு அதே புல்வாமா பகுதியில் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. 

புல்வாமா தாக்குதல்

புல்வாமா பகுதியில் உள்ள பிங்க்லன் என்ற இடத்தில் ஜெயிஷ்-இ-அகமது அமைப்பை சேர்ந்த சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை ராணுவ வீரர்கள், காஷ்மீர் போலீஸார் மற்றும் 55 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினரும் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். ராணுவ வீரர்கள் சுற்றியதை அறிந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். 

பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த தாக்குதலில் மேஜர் உள்பட நான்கு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவதிகளில் மூன்று பேர் உயிருடன் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


[X] Close

[X] Close