விவசாயிகளுக்கு இரண்டு தவணையாக நிதியுதவி! - மத்திய அரசு அறிவிப்பு | Prime Minister Modi will inaugurate Rs. 2000 scheme on February 24th

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (18/02/2019)

கடைசி தொடர்பு:13:35 (18/02/2019)

விவசாயிகளுக்கு இரண்டு தவணையாக நிதியுதவி! - மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் `இரண்டு ஹெக்டேருக்குக் குறைவாக நிலமுள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் இதை மூன்று தவணையாகப் பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவித்தது மத்திய அரசு. இதில் முதல் தவணையாக பிப்ரவரி 24-ம் தேதி 2000 ரூபாயும், ஏப்ரல் 1-ம் தேதி இரண்டாவது தவணையாக 2000 ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 

மத்திய அரசு  வேளாண்மை திட்டம்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பிரதான் மந்திரி கிஷன் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்குக் குறைவான நிலமிருந்தால் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் இந்தத் தொகை நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்தது மத்திய அரசு. 

தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் பிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பயனாளி விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இரண்டாவது தவணை ஏப்ரல் 1-ம் தேதியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


[X] Close

[X] Close