Published:Updated:

`உலகத் தரமான சாலைகள்; 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி!' - மத்திய அரசு திட்டம்

22 பசுமைவழிச் சாலைகள் உட்பட உலகத் தரம் வாய்ந்த சாலைகள் இந்தியாவில் அமைக்கப்படும்.

Fastag - உலகத்தரம் வாய்ந்த சாலைகள்!
Fastag - உலகத்தரம் வாய்ந்த சாலைகள்!

இந்திய நெடுஞ்சாலைகளின் தரம் மற்றும் மேம்பாட்டுக்காக புதிய மோட்டார் வாகனச் சட்டம், இ-டோலிங் முறை, InvIT தொழில்நுட்பம் எனத் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை சாலைப் போக்குவரத்துத் துறை செய்துவருகிறது. அப்படியான உலகத்தரம் வாய்ந்த சாலைக் கட்டமைப்புக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Nitin Gatkari
Nitin Gatkari

மேலும் அவர், ``என்றுமே சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது இல்லை; இனியும் வராது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்புக்காக மட்டும் ரூ.17 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 22 பசுமைவழிச் சாலைகள் உட்பட உலகத்தரம் வாய்ந்த சாலைகளை இந்தியாவில் அமைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது” என்றார்.

Vikatan

FASTags முறையை நாடு முழுவதிலும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற உத்தரவுக்குப் பின், ஃபாஸ்ட்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அக்டோபர் மாதம் வரை ரூ.13.500 கோடி இதன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.