`இது தவறான பாதை, இந்த மேப் உங்களை ஏமாற்றுகிறது'... கோவாவில் கூகுள் மேப்புக்கு வந்த சோதனை! | Here's why this banner in Goa is 'warning' tourists against ..

வெளியிடப்பட்ட நேரம்: 07:21 (19/02/2019)

கடைசி தொடர்பு:07:24 (19/02/2019)

`இது தவறான பாதை, இந்த மேப் உங்களை ஏமாற்றுகிறது'... கோவாவில் கூகுள் மேப்புக்கு வந்த சோதனை!

கூகுள் மேப்

ஸ்மார்ட்போனில் அனைவருக்கும் அவசியமாகத் தேவைப்படும் ஆப்களில் ஒன்றாகக் கூகுள் மேப் மாறிப் பல காலம் ஆகிறது. எந்த ஊராக இருந்தாலும் கூகுள் மேப் துணையிருந்தால் வழியைக் கண்டுபிடித்து விடலாம். பெரும்பாலும் கூகுள் மேப் சரியான வழியையே காட்டுவதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், போகும் இடத்துக்குத் தவறான பாதையைக் கூகுள் மேப் காட்டும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது கோவாவில். அங்கே இருக்கும் பாகா கடற்கரைக்குச் செல்லும் வழியை நீண்ட காலமாக தவறாகவே காட்டி வந்திருக்கிறது கூகுள் மேப்.

இது தொடர்ந்து நடைபெறவே ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்டார்கள் அங்கே வசிக்கும் குடியிருப்புவாசிகள். இப்படி வழி மாறிச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு சரியான வழியைத் தெரிவிக்கும் வகையில் சிறிய பேனர் ஒன்றைச் சாலையில் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். சுமந்த் ராஜ் என்பவர் (Sumanth Raj) ட்விட்டரில் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார் .


[X] Close

[X] Close