குருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்! எல்.ஐ.சி-க்கு குவியும் பாராட்டு | Netizens pours praises to LIC after Pulwama martyr Guru's family receives Rs 3 lakh before his mortal remains reaches home

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (19/02/2019)

கடைசி தொடர்பு:11:08 (21/02/2019)

குருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்! எல்.ஐ.சி-க்கு குவியும் பாராட்டு

புல்மாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்தச் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. நாடு முழுவதும் இருந்து, பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு நாடு முழுவதுமிருந்து நிதி குவிந்து வருகிறது. புல்மாவில் பலியான வீரர்களுள் கர்நாடகத்தைச் சேர்ந்த குருவும் (வயது 33) ஒருவர். 

குரு வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய எல்.ஐ.சி.

மாண்ட்யா மாவட்டத்தில் மட்டூர் அருகேயுள்ள குடிகரே என்ற கிராமம்தான் குருவின் சொந்த ஊர். சலவைத் தொழிலாளி தம்பதி ஹொன்னையா - சிக்கெலம்மாவின் மூத்த மகன் இவர். 2011-ம் ஆண்டு சி.ஆர்.பி.எஃப் இணைந்தார். 10 மாதங்களுக்கு முன்தான் குருவுக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் கலாவதி. 10 நாள்களுக்கு முன் குடிகரே வந்து பெற்றோரையும் மனைவியையும் பார்த்துச் சென்றார். தொடர்ந்து, பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தாக்குதலில் குரு மரணமடைந்த செய்தி கேட்டு குடும்பம் நிலைகுலைந்தது. 

விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊருக்கு வந்து தாயையும் தந்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று குரு முடிவு செய்திருந்தார். அதற்குள், தீவிரவாதி உருவில் காலன் குருவை பறித்துக்கொண்டான். ஏழ்மை நிலையில் இருந்த குருவின் குடும்பத்துக்குச் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இதனால், அரசே அவரின் உடலைப் புதைக்க மாவட்ட நிர்வாகமே நிலம் வழங்கியது. குருவின் மனைவி கலாவதிக்கு அரசு வேலை வழங்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

எல்,ஐ.சி

குரு தன் பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். எல்.ஜ.சி பாலிசியும் எடுத்து வந்துள்ளார். புல்மாவா தாக்குதலில் குரு வீர மரணமடைந்த தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே எல்.ஐ.சி நாமினியின் வங்கிக் கணக்கில் அவருக்குச் சேர வேண்டிய ரூ. 3,82,199 செலுத்தி விட்டது. இறப்புச் சான்றிதழையோ அல்லது வேறு எந்த ஆவணங்களையே எல்.ஐ.சி கேட்கவில்லை. வழக்கமாக நாமினி, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். இயற்கைக்கு மாறான மரணம் என்றால் போலீஸ் எஃப்.ஐ.ஆர் கொடுத்தால்தான் எல்.ஐ.சி நிறுவனம்  நாமினியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும். 

இறந்த குருவின் குடும்பத்தினரின் நிலையை அறிந்தே, குருவின் வயதான பெற்றோர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே மாண்ட்யா மாவட்ட எல்.ஐ.சி அதிகாரிகள் குருவின் உடல் வீட்டுக்கு வருவதற்குள் பணத்தை நாமினியின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டனர். எல்.ஐ.சி அதிகாரிகளின் மனிதாபிமானமிக்க செயல், மக்களிடையே பாராட்டைப் பெற்றது. நெட்டிசன்களும் எல்.ஐ.சி நிறுவனத்துக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல் எஸ்.பி.ஐ வங்கியும் புல்மாவா தாக்குதலில் இறந்த வீரர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இறந்த 40 பேரில் 23 பேர் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் பெற்றிருக்கின்றனர். அதோடு தலா ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகையும் பலியானவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்போவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close