`காஷ்மீர் பிரச்னையை சுமுகமாக தீர்க்கலாம்!’- இந்தியா வந்த சவுதி இளவரசர் சொல்லும் யோசனை | Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman at Rashtrapati Bhavan in Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (20/02/2019)

`காஷ்மீர் பிரச்னையை சுமுகமாக தீர்க்கலாம்!’- இந்தியா வந்த சவுதி இளவரசர் சொல்லும் யோசனை

முகமது பின் சல்மான், சவுதி இளவரசராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதன்முதலாக பாகிஸ்தான் சென்ற சல்மானை, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சிறப்பான முறையில் வரவேற்றார். பிறகு சவுதிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முகமது பின் சல்மான்

இதையடுத்து, நேற்று பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா வந்தார் சவுதி இளவரசர். அவரை மரபுகளை மீறி இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று கட்டியணைத்து வரவேற்றார். இதையடுத்து, இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த சவுதி இளவரசருக்குச் சிறப்பான முறையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. 

இன்று இந்தியா வந்துள்ள பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவுதி இடையேயான உறவுகள் வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் சவுதி இளவரசர். ராணுவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவரின் வருகை தொடர்பாக பேசியுள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் தூதர் டல்மிஸ் அகமது, `சவுதி இளவரசரின் இந்திய வருகையை புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வந்துள்ளார் என்ற கோணத்தில் நாம் பார்க்கக் கூடாது. பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளும் கணிசமான உறவில் இருந்துவருகிறோம். சவுதி இளவரசரின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பாகிஸ்தானும் பொதுமக்களுக்கான அரசுதான். அதில் எந்த வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்துடன், சவுதி நல்ல நட்பு கொண்டுள்ளது. இதனால் சவுதி மூலம் பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால் காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காணலாம்’ எனத் தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close