`பா.ம.க-வைப் போல தே.மு.தி.க கேட்கிறது... அதான் இழுபறி! '- பா.ஜ.க சொல்கிறது | DMDK - BJP alliance yet to finalized

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (20/02/2019)

கடைசி தொடர்பு:15:28 (20/02/2019)

`பா.ம.க-வைப் போல தே.மு.தி.க கேட்கிறது... அதான் இழுபறி! '- பா.ஜ.க சொல்கிறது

  

மிழகம் மற்றும் புதுச்சேரியில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தே.மு.தி.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

அ.தி.முக-வுடன் பா.ம.க நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று உடன்பாடானதையடுத்து, பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க, அக்கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது. இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வும் இணைகிறது என்று பேசப்பட்டுவரும் நிலையில், தே.மு.தி.க-வின் நிலை இன்னும் உறுதியாகாமல் உள்ளது. இதற்கிடையே, பா.ஜ.க தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

அ.தி.மு.க -  தே.மு.தி.க

இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஆனால், எங்களுடைய கூட்டணிக்கு தே.மு.தி.க வருவது உறுதி" என்றார். அ.தி.மு.க -தே.மு.தி.க இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, பா.ம.க-வுக்கு கொடுத்ததைப் போன்று தங்களுக்கும் வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு அ.தி.மு.க  தரப்பில் இருந்து 3 மக்களவைத் தொகுதிகளும். ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருகிறோம் என்று கூறியதாகச் சொல்கின்றனர். அதனை ஏற்காமல் தே.மு.தி.க மௌனம்காத்துவருவதால்தான் இந்த இழுபறி. இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால், இன்று மாலைக்குள் முடிவு தெரிந்து விடும்" என்றார். 

 


[X] Close

[X] Close