`இது குறும்புக்காரக் கடவுளின் வேலை!’- ராஜஸ்தானிலிருந்து பெங்களூருவுக்குப் பயணித்த ஸ்விக்கி | bengaluru resident's order got picked up by Swiggy all the way in Rajasthan

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (20/02/2019)

கடைசி தொடர்பு:19:15 (20/02/2019)

`இது குறும்புக்காரக் கடவுளின் வேலை!’- ராஜஸ்தானிலிருந்து பெங்களூருவுக்குப் பயணித்த ஸ்விக்கி

தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் அனைத்தும் ஆன்லைனில் எளிதாகப் பெறலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு உணவுப் பொருள்களும் விதிவிலக்கு அல்ல. இந்த உணவு வேண்டும் என ஆர்டர் செய்தால் குறித்த நேரத்துக்குள் உணவு ரெடியாகி நம் வீட்டுக் கதவைத் தட்டும். இந்த ஆப்களுக்குத் தற்போது உள்ள இளைஞர்கள் அடிமையாகிவிட்டனர் என்றே கூறவேண்டும். இந்த ஆப் மூலம் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று இரண்டு நாள்களாக இணையத்தைக் கலக்கி வருகிறது. 

ஸ்விக்கி

நாம் சில ஆப்களில் உணவு டெலிவரி செய்து அது வர சிறிது தாமதமானால் `உங்கள் ஆர்டர் டெலிவரி செய்வதில் சிறு தாமதம் உள்ளது. சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என்ற செய்தி அடிக்கடி ஆப் தரப்பிலிருந்து வந்துகொண்டே இருக்கும். இதே போன்ற ஒரு செய்திதான் பெங்களூரு இளைஞரைக் கடுப்பாக்கி உள்ளது.

பெங்களூவில் வசிக்கும் பார்கவ் ராஜன் என்பவர் பிரபல உணவு டெலிவரி ஆப்பான ஸ்விக்கி மூலம் ஓர் உணவை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் உங்கள் ஆர்டர் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவரது செல்போனுக்குக் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது. ஆனால், நீண்ட நேரமாகியும் உணவு டெலிவரி ஆகவில்லை. வழக்கம் போல டெலிவரியில் தாமதம் என்ற செய்தி மட்டும் வந்துள்ளது. டெலிவரியைப் பற்றி தெரிந்துகொள்ள போனை எடுத்தபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் காட்டப்படும் மேப்பில் ராஜஸ்தானிலிருந்து உணவு வந்துகொண்டிருப்பதாகவும் இன்னும் 20 நிமிடங்களில் வந்துவிடும் என்றும் வழி காட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்து வியந்த பார்கவ் ராஜன், அதை உடனடியாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து ஸ்விக்கியை டேக் செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது பெரும் வைரலாகியுள்ளது.

பார்கவின் ட்வீட்டைப் பார்த்த ஸ்விக்கி அதற்குப் பதிலும் தெரிவித்துள்ளது. `இது குறும்புக்காரக் கடவுளின் வேலையாகத்தான் இருக்கும். நகைச்சுவையைத் தாண்டி இந்தச் சர்ச்சை தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தி வரும் காலங்களில் இது போன்று தவறு நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கிறோம். தவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதையடுத்து மற்றுமொருவர்,  ‘வெறும் 138 ரூபாய்க்காக ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு உணவு வருகிறது. இது உங்கள் நம்பிக்கையைக் காட்டுகிறது’ என ஸ்விக்கியிடம் தெரிவித்திருந்தார். அதற்கு, “ உங்களுக்கு உணவு தேவைப்பாட்டால் நிலவிற்கு சென்று கூட நாங்கள் மீண்டும் திரும்புவோம்’ என ஸ்விக்கி தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 


[X] Close

[X] Close