ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! - 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு | : The six-year-old boy who fell into a borewell in Pune has been safely rescued

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (21/02/2019)

கடைசி தொடர்பு:11:12 (21/02/2019)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! - 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்புக் குழு பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்டுள்ளது.

சிறுவன்
 

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் அம்பேகான் என்ற சிறு கிராமம் உள்ளது. அங்கு நேற்று (21.2.2019) 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் 6 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். சிறுவன் 10 அடி ஆழத்தில் சிக்கி கொண்டிருப்பதாக மீட்புக் குழு முதலில் தெரிவித்தது. பின்னர் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 16 மணி நேர முயற்சிக்குப் பின்னர் மீட்புக் குழு சிறுவனை மீட்டுள்ளது. ANI ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மீட்புக் குழுவினர் கைகளில் சிறுவன் கதறி அழுவது தெரிகிறது. மேலும், சிறுவனுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close