சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் இறங்க விவசாய நிலம் அழிப்பு... விவசாயி தற்கொலை | farmer suicide after construction helipad in his land by govt officials

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:35 (21/02/2019)

சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் இறங்க விவசாய நிலம் அழிப்பு... விவசாயி தற்கொலை

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்ததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

ஆந்திராவில் விவசாயி தற்கொலை

குண்டூர் மாவட்டம், எட்லபாடு அருகே உள்ள புட்லகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்ல கோட்டேஷ்வர ராவ். கிராமத்து அருகே இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் இருந்தது. கடந்த திங்கள்கிழமை கொண்டவீனு கோட்டையில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்றார். சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தரையிறங்க கோட்டேஸ்வர ராவுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அழித்த அரசு அதிகாரிகள் அதில், ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். இதற்கு, கோட்டேஸ்வரராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீஸார் அவரைத் துன்புறுத்தியுள்ளனர். தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கோட்டேஷ்வரராவ் விஷம் குடித்தார். மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துபோனார். 

விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளம்

இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து சந்திரபாபு நாயுடுவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குண்டூர் எஸ்.பி.ராஜேசேகர பாபு கூறுகையில், போலீஸ் கோட்டேஷ்வரராவை துன்புறுத்தவில்லை. முதல்வர் வருவதை முன்னிட்டு அவரின் நிலத்தில் சிறிய போலீஸ் கண்ட்ரோல் மையம் அமைக்கப்பட்டது’’ என்று மறுத்துள்ளார். 

கோட்டேஷ்வரராவ் குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெலுங்குதேசம் தெரிவித்துள்ளது. ஆந்திர அரசு இறந்துபோன கோட்டேஷ்வரராவ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவித்துள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close