`பாகிஸ்தான் ஒழிகன்னு சொன்னா லெக் பீஸ் தள்ளுபடி!'- தள்ளுவண்டி கடைக்காரரின் நூதன அறிவிப்பு | A food stall owner in Jagdalpur is offering a discount of ₹10 on chicken leg piece

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (21/02/2019)

`பாகிஸ்தான் ஒழிகன்னு சொன்னா லெக் பீஸ் தள்ளுபடி!'- தள்ளுவண்டி கடைக்காரரின் நூதன அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் உள்ள தள்ளுவண்டிக்கடை உரிமையாளர் நூதன தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தள்ளுவண்டி கடை

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இந்த ஆண்டின் மறக்கமுடியாத நாளாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளனர். நாடே கொந்தளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வருகிறது.

லெக் பீஸ்

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் தள்ளுவண்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் அன்ஜல் சிங். இவர் தன்னுடைய தள்ளுவண்டி கடைக்கு முன்புறம் தள்ளுபடி அறிவிப்பு ஒன்றை ஒட்டியுள்ளார். இந்த நூதனமான அறிவிப்பு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. `பாகிஸ்தான் ஒழிக!' என முழக்கமிடுபவர்களுக்கு சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என்பதே அந்த அறிவிப்பு.

சிங்

 

இது தொடர்பாக அன்ஜல் சிங் பேசுகையில், `பாகிஸ்தான் ஒருபோதும் மனிதநேயத்தை மதித்ததேயில்லை. எதிர்காலத்திலும் அதை உணரப்போவதில்லை. இதன்காரணமாக எல்லோரும் தங்கள் இதயத்திலிருந்து, `பாகிஸ்தான் ஒழிக!' என்று கூற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close