‘புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ் | PM Modi was busy shooting when pulwama attack congress says

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (21/02/2019)

கடைசி தொடர்பு:15:55 (21/02/2019)

‘புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நடந்த மிகப்பெரும் தாக்குதலாக வரலாற்றில் கறுப்பு நாளாக இடம் பிடித்துள்ளது கடந்த 14-ம் தேதி நடந்த தாக்குதல். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

புல்வாமா தாக்குதல்

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு இந்திய அளவில் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. 

இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு சர்ச்சையும் தொடங்கியுள்ளது. அது, இந்த மாதம் இறுதியில் வெளியாகவுள்ள ஆவணப்படம் ஒன்றில் இமயமலைக்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்கிறார் பிரதமர் மோடி. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உத்தகாண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் பூங்காவில் இந்த ஆவணப் படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதனால் அன்று காலை 7 மணி முதல் மாலை வரை அங்கேயே சூட்டிங்கில் பிஸியாக இருந்துள்ளார் பிரதமர். அவரின் புகைப்படங்களை அந்த மாநில ஊடகங்கள் வெளியிட்டன.

தற்போது இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுப் பேசியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நந்தீப் சுர்ஜோவாலா, ‘புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று பிற்பகல் ஒட்டுமொத்த இந்தியாவும் தாக்குதலில் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ ஜிம் கார்பெட் பூங்காவில் மாலைவரை பிஸியாக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தார். இவரைப் போன்று உலகில் வேறு எந்தப் பிரதமரும் இருக்க மாட்டார். இந்த விஷயம் பற்றி பேச எனக்கு வார்த்தைகளே வரவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close