அதானி மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்! – குஜராத் அரசு சமர்ப்பித்த அதிர்ச்சி ரிப்போர்ட் | Over 1,000 children died in Adani hospital in 5 years 

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (21/02/2019)

கடைசி தொடர்பு:16:10 (21/02/2019)

அதானி மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்! – குஜராத் அரசு சமர்ப்பித்த அதிர்ச்சி ரிப்போர்ட்

குஜராத்தில், அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் மட்டும் 1000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி


குஜராத் சட்டப்பேரவையில் நேற்று (21-02-2019) நடந்த கேள்வி நேரத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதை பற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, துணை முதல்வர் நிதின் படேல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், குஜராத்தின் குட்ச் பகுதியில் தொழிலதிபர் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜி.கே என்னும் மருத்துவமனையில், கடந்த 5 ஆண்டுகளில் 1,018 குழந்தைகள்  உயிரிழந்துள்ளதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2014-15-ம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16-ம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17-ம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18-ம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19 நடப்பாண்டில் 159 குழந்தைகளும் வெவ்வேறு உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதானி நடத்தும் மருத்துவமனை

இந்த அறிக்கையில், ` குழந்தைகள் மரணம்குறித்து அரசு ஆய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதானியின் ஜி.கே மருத்துவமனை, அரசு வகுத்த நெறிமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டுதல்களோடு சிகிச்சை அளித்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த கோரக்பூர் குழந்தைகள் மரணம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close