மீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி! | Maharashtra big farmers protest started

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (21/02/2019)

மீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி!

டந்த ஆண்டு, மகாராஷ்டிராவில் நடந்த மாபெரும் விவசாயிகள் பேரணி, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. சில ஆயிரம் பேருடன் ஆரம்பித்த பேரணி, மும்பையை அடையும்போது ஐம்பதாயிரம் பேரைக் கொண்டிருந்தது. 180 கி.மீ கால்நடையாக நடந்துவந்து, நேர்த்தியான முறையில் அந்தப் பேரணி நடைபெற்றது. அதைக் கண்டு அதிர்ந்துபோன மகாராஷ்டிர அரசு, மூன்று மாதங்களுக்குள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தது. 

விவசாயிகள்

ஆனால், அப்போது அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மீண்டும் ஒரு பேரணியை விவசாயிகள் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைக்கிறது. 

இந்த முறை, ஐம்பதாயிரம் பேர் நாசிக்கில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு கிளம்பியிருக்கிறார்கள். மொத்தம் 23 மாவட்ட விவசாயிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றிருக்கிறார்கள். பிப்ரவரி 27-ம் தேதி, மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்தை அடையும்படி பேரணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் ஓய்வூதியம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பழைய கோரிக்கைகளையே முன்னிறுத்தி, இந்தப் பேரணி தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ஒருமுறை தேவேந்திர பட்னாவிஸ் அரசை ஆட்டம் காணச்செய்த இந்தப் பேரணி, மீண்டும்  தொடங்கியிருக்கிறது. இதற்கு, தொடக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டாலும், பேரணியைத் தாங்கள் அறிவித்த நாளிலேயே உறுதியுடன் தொடங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்தப் பேரணி, ஆளும் பா.ஜ.க அரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

 


[X] Close

[X] Close