`இந்த இடத்தில் சே குவேரா படத்தை வைக்கக் கூடாது!'- கடுகடுத்த பினராயி விஜயன் | Govt not of LDF: Pinarayi says don't wave che guevaraa flag at official event

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (21/02/2019)

`இந்த இடத்தில் சே குவேரா படத்தை வைக்கக் கூடாது!'- கடுகடுத்த பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கேரளா மாநிலம் பரப்பனங்கடி துறைமுகத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புரட்சியாளர் சே குவேராவின் படம் உள்ள கொடியை கட்சியினர் பறக்க விட்டிருந்தனர். இதைக் கண்ட பினராயி, கடுமையான கோபத்தை கட்சியினரிடையே காட்டினார். அப்போது பேசிய பினராயி விஜயன், ``கேரள அரசாங்கம் என்பது இடசாரி கட்சி கிடையாது. தேர்தலில் 58 இடங்களை பிடித்து நாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்காக இப்படிச் செய்யக் கூடாது. 

இந்த நிகழ்ச்சியில் புரட்சியாளர் சே குவேராவின் படத்தை நமது தோழர்கள் பறக்கவிட்டிருந்தனர். அது தவறான செயல்முறையாகும். அரசாங்க  நிகழ்வு ஒட்டு மொத்த மக்களும் பங்கேற்க கூடிய நிகழ்ச்சி. இதில் பலதரப்பட்ட கொள்கை உடைய மக்கள் பங்கேற்கிறார்கள். அதில் நமது கொள்கையைப் பரப்ப நிர்பந்திக்கக் கூடாது

நான் அவருடைய கொடியைப் பறக்க விடக்கூடாது என்று சொல்லவில்லை. அதை இந்த இடத்தில் செய்யக் கூடாது என்றுதான் சொல்கிறேன். இது ஒரு மாநிலத்தின் அரசாங்க நிகழ்வு. இதில் நமது புரட்சியாளர் புகைப்படத்தை வைப்பது சரியல்ல" என்றார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்த படங்கள்  அகற்றப்பட்டன.   


[X] Close

[X] Close