`காஷ்மீர் வேண்டும்; காஷ்மீரிகள் வேண்டாமா?' - ப.சிதம்பரம் | p chidambaram criticises those who discriminate against kashmiri and kashmiri products

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (22/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (22/02/2019)

`காஷ்மீர் வேண்டும்; காஷ்மீரிகள் வேண்டாமா?' - ப.சிதம்பரம்

”இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரிடமிருந்து வரும் கோரிக்கை: காஷ்மீருக்கு வருகைதர வேண்டாம். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமர்நாத்துக்கு போகாதீர்கள். காஷ்மீர் எம்போரியத்திலும், காஷ்மீரி வணிகர்களிடமும் பொருள்களை வாங்க வேண்டாம். காஷ்மீரைச் சேர்ந்த எதையும் புறக்கணியுங்கள்” என ட்வீட் செய்திருக்கும் மேகாலய ஆளுநர் ததகாத்த ராயின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

              சிதம்பரம்

''காஷ்மீரிகள் வேண்டாம் எனப் புறக்கணிக்கும் மேகாலயா ஆளுநரையும், மற்றவர்களையும் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட வல்லபபாய் படேலின் சிலை பார்த்துக்கொண்டிருக்கிறது'' என்று விமர்சித்திருக்கிறார். மேலும், காஷ்மீர் வேண்டும், காஷ்மீரிகள் வேண்டாம் என்னும் முரண் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்படுவதாக வெளியிடப்பட்ட செய்திகள் தவறு என மறுப்பு தெரிவித்திருக்கும் மனிதவள அமைச்சகத்தின் அறிக்கைக்குப் பதிலளித்திருக்கும் அவர், “மனிதவள அமைச்சகத்தின் பார்வையில் காஷ்மீரி மாணவர்கள், மனிதர்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்தடுத்த நாள்களில், ஜம்முவில் காஷ்மீரி வணிகர்களையும் மாணவர்களையும் சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் தாக்கியிருக்கிறார்கள். ஜம்மு நகரத்தின் குஜ்ஜார் காலனியில், 15 கார்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஹரியானா மாநிலத்தின் வாடகை குடியிருப்புகளில் தங்கியிருந்த காஷ்மீரி மாணவர்கள், தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close