தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பெண்! - பி.வி.சிந்துவுக்குக் கிடைத்த கௌரவம் | PV Sindhu Flies in tejas aircraft

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (23/02/2019)

கடைசி தொடர்பு:17:45 (23/02/2019)

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பெண்! - பி.வி.சிந்துவுக்குக் கிடைத்த கௌரவம்

பி.வி.சிந்து

பெங்களூரில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார்.  இதில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கண்காட்சியின் நான்காம் நாளான இன்று பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வில் சாதனைகளைப் புரிந்த பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு விமானத்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் விமான பைலட்டுகள் அணியின் பச்சைநிற உடையை அணிந்து வந்து தேஜாஸ் போர் விமானத்தில் விமானியுடன் ஏறினார். இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்த சிறிய ரக போர் விமானத்தில் கோ- பைலட்டாக சிந்து பறந்தார். தேஜாஸ் விமானத்தில் பறந்த முதல் பெண் இவர் தான்.

தேஜாஸ் விமானம்


பேட்மின்டன் போட்டிகளில் தனது ராக்கெட்டுகளால் எதிராளிகளை அச்சுறுத்திய சிந்து இன்று சிறிய ரக போர் விமானத்தில் பறந்தார். இந்தப் புகைப்படங்களை சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


[X] Close

[X] Close