தனியார் நிறுவனங்கள் தாது மணல் எடுக்கத் தடை! - மத்திய அரசு அதிரடி | Centre banned beach sand mining by private companies

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (23/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (23/02/2019)

தனியார் நிறுவனங்கள் தாது மணல் எடுக்கத் தடை! - மத்திய அரசு அதிரடி

கடற்கரை மணலில் இருந்து தனியார் நிறுவனங்கள் தாதுமணல் எடுப்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

தாது மணல்

இந்தியக் கடற்கரை பகுதிகளில் அரிதான தாதுக்கலவை கிடைக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணலில் தாதுக்கள் அதிக அளவு இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு கூறுகிறது. இல்மினைட், சிலிமனைட், கார்னேட், சிர்கான், மோனசைட் மற்றும் ரூட்டைல் இந்த கலவையே கடற்கரை தாதுமணல்கள் எனக் கூறப்படுகிறது. இந்த தாதுப்பொருள்களை உலகளவில் இந்தியா 35 சதவிகிதம் கொண்டுள்ளது. கடற்கரை மணலில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த தாதுகள் அணு ஆயுதங்கள், மின் உற்பத்தி மற்றும் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களை இந்தத் தாதுகளை பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தன. 

தாது மணல்

இந்நிலையில் தான் மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் கடற்கரை மணலில் இருந்து தாதுமணலை பிரித்தெடுப்பதற்குத் தடை விதித்துள்ளது. தனியார் நிறுவனங்களால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா கடற்கரை பகுதியில் மண் அரிப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது போன்ற புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், தனியார் நிறுவனங்கள் தாதுமணல் எடுக்க  அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு மேற்கொண்ட திருத்தத்தின் படி தனியார் தாது மணல் சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது இந்த விதிகளில் மத்திய அரசு மீண்டும் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அந்த திருத்தங்களின் படி இனி தனியார் நிறுவனங்கள் தாது மணல்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 


[X] Close

[X] Close