காந்தியை அவமதித்த பூஜா பாண்டேவுக்கு இந்து மகா சபா பாராட்டு! | Hindu Mahasabha felicitate puja Pandey who fired at Mahatma Gandhi’s photo

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (25/02/2019)

கடைசி தொடர்பு:11:55 (25/02/2019)

காந்தியை அவமதித்த பூஜா பாண்டேவுக்கு இந்து மகா சபா பாராட்டு!

காந்தி நினைவு தினத்தில் அவரின் உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்ட பூஜா பாண்டேவுக்கு இந்து மகா சபா கௌரவித்துள்ளது.

காந்தியை அவமதித்த புஜாவுக்கு விருது

கடந்த ஜனவரி 30- ந் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அலிகாரில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுடுவது போன்று இந்து மகா சபா நிர்வாகி பூஜா பாண்டே போஸ் கொடுத்தார். இதே வளாகத்தில் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீஸார் பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

பூஜா பாண்டே

இந்நிலையில்,  பூஜா பாண்டே உள்ளிட்ட 14 பேருக்கும் இந்து மகா சபா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்து மகா சபா அகில இந்தியத் தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக், பகவத் கீதையுடன் வாள் ஒன்றை பூஜா பாண்டேவுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சந்திரபிரகாஷ் கௌசிக், ``நாங்கள் போலீஸூக்கு பயப்படப் போவதில்லை. பூஜா பாண்டே செய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தச் சூழலில் எங்களுக்கு உதவிக்கரமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியை அலிகார் போலீஸ் வீடியோவாக எடுத்துள்ளது. இந்த நிகழ்வில் ஆட்சேபத்துக்குரிய எந்த விஷயமும் இடம் பெறவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close