`காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரெடி?'- பா.ஜ.க கிண்டல் ட்வீட் | Robert Vadra talks of playing 'larger role' in serving people

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (25/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (25/02/2019)

`காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரெடி?'- பா.ஜ.க கிண்டல் ட்வீட்

மக்கள் சேவையில் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை கலாய்த்து பா.ஜ.க. 

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா மீது நில மோசடி புகார் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் இவருடைய சில சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த வாரம் முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்களில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார் ராபர்ட். இந்த வழக்கில் அவர் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராபர்ட் வதேரா நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

ராபர்ட் - பிரியங்கா காந்தி

அதில், ``நாட்டில் உள்ள பிரச்னைகளை திசைதிருப்ப சில அரசாங்கங்கள் என் பெயரை தவறாக சித்திரித்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. ராஜஸ்தான், கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்காக சில நல்ல காரியங்களில் ஈடுபட்டுள்ளேன். பல ஆண்டுகளாக மக்கள் பணியில் என்னை ஈடுபடுத்தியுள்ளேன். என்னால் முடிந்த மக்களுக்கு நற்பணிகளைச் செய்துள்ளேன். நான் செய்த இந்த நற்பணிகள் எனக்கு மக்களிடம் நல்ல பெயரை பெற்றுத்தந்ததுடன் சில அனுபவங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது. இந்த அனுபவங்களை நான் வீணடிக்க விரும்பவில்லை. என் மீதான வழக்குகள் முடிந்ததும், விரைவில் முழுமையாக மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவேன். மக்கள் பணியில் பெரிய பங்களிப்பை கொடுப்பேன்" எனக் கூறியிருந்தார். 

ராபர்ட்

இவரின் இந்தப் பதிவை அடுத்து அவர் அரசியலுக்கு வரவுள்ளார் எனப் பேச்சு கிளம்பியது. வட மாநில ஊடகங்கள் இந்தப் பதிவை பெரிதாகச் செய்தி வெளியிட, தற்போது வதேராவை பா.ஜ.க கலாய்த்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரெடி எனக் கூறியுள்ளது. சமீபத்தில் பிரியங்கா காந்தி அதிகாரபூர்வமாக அரசியலுக்குள் நுழைந்தார். அவருக்கு உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராக ராகுல் காந்தி பதவி கொடுத்தார். இந்த நிலையில் ராபர்ட் வதேராவும் அரசியலுக்கு நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close