`அவரை உடனடியாகக் கைதுசெய்யுங்கள்!’ - மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு | Mukul Roy has demanded Banerjee's arrest for late ips officer suicide

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:16:17 (25/02/2019)

`அவரை உடனடியாகக் கைதுசெய்யுங்கள்!’ - மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில், ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிவந்த கௌரவ் தத்தா, கடந்த சில  தினங்களுக்கு முன்பு தன் வீட்டில் யாரும் இல்லாத  நேரத்தில் மணிக்கட்டை கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைசெய்துகொண்டார். 

தற்கொலைக்குப் பிறகு அவரது வீட்டில் நடந்த சோதனையில், கௌரவ் இறுதியாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இருந்தும் மம்தா அதை முடித்துவைக்க மறுக்கிறார். கடந்த பத்து வருடங்களாக மம்தா என்னை ஒரு குற்றவாளியைப் போல் பார்க்கிறார். அவர் ஒற்றை மனத்துடன் ஒரு தலையாக மட்டும் என்னைப் பற்றி தெரிந்துகொண்டதுதான் இதற்குக் காரணம். 

வழக்கு முடியாததால், இதுவரை எனக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய்  ஓய்வூதியத் தொகை வரவில்லை. அதை வராமல் தடுப்பதற்காகவே வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளார் மம்தா. மேற்கு வங்கத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் அரசை எதிர்த்து பேச பயப்படுவர். அதையும் மீறிப் பேசினால், ஆளும் கட்சியிலிருந்து உடனடி பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்குள்ள அனைவரும் அடிமைகளைப் போல், கைதிகளைப் போல் உள்ளனர்’ என எழுதியிருந்தார். இந்த விவகாரம், மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாகப் பேசியுள்ள மேற்கு வங்க பாஜக-வைச் சேர்ந்த தலைவர் முகுல் ராய், ‘ மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டு, அதற்குக் காரணம் அரசு மற்றும் ஆளும் கட்சிதான் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். கடிதத்தை ஆதாரமாகக்கொண்டு மம்தாவை கைதுசெய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 
 


[X] Close

[X] Close