தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு `தேசிய நீர் விருது'! | Tamil Nadu's 3 districts get the national water awards

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:15 (25/02/2019)

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு `தேசிய நீர் விருது'!

ந்தியாவில் நீர் வள மேலாண்மையின் முக்கியத்துவத்தைக் கருதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைப்பு, தேசிய நீர் விருதுகளை வழங்கியுள்ளது. நீர்வளங்களைத் திறமையாகவும், அதுகுறித்த விழிப்புணர்வை நாட்டில் ஏற்படுத்துவதற்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராமப் பஞ்சாயத்து, சிறந்த நகராட்சி, நீர் சேமிப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை, ஆராய்ச்சியைப் பயன்படுத்தும் அமைப்பு, சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

தேசிய நீர் விருது

2018 - ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுக்கான விண்ணப்பங்கள் 13 பிரிவுகளில் வாங்கப்பட்டன. அதன்படி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. 

2018-ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு, தமிழகத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன. நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் சிறந்த  நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக, மதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு நதி மீட்டெடுத்தல் பணிக்காகவும், சிவகங்கை மாவட்டத்திற்கு நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பணிகளுக்காகவும் இரண்டு மாவட்டங்களுக்கும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. விருதுகளை மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுக்கொண்டனர். 


[X] Close

[X] Close