`அந்த வேன் கல்லூரி மாணவருடையது!’ - புல்வாமா தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் | Pulwama terrorist used a van for attacking CRPF convoy, car owner on the run

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (26/02/2019)

`அந்த வேன் கல்லூரி மாணவருடையது!’ - புல்வாமா தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்

நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் பற்றிய சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

புல்வாமா

கடந்த 14-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த வேன், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில்,  44 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்.  புல்வாமா தாக்குதலுக்கு முறையான முன் நடவடிக்கை இல்லாதது மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு  அமைப்பு (NIA) விசாரணை மேற்கொண்டுவருகிறது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட `Maruti Eeco’  வேன், குண்டு வெடிப்பில் பல பாகங்களாகச் சிதறியது. ஆட்டோமொபைல் மற்றும் தடயவியல் நிபுணர்களைக்கொண்டு வேனின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வேனை ஓட்டிவந்து தாக்குதல் நடத்தியவர் பெயர் ஆதில் அகமது தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. புலனாய்வு அமைப்பு தற்போது காரின் உரிமையாளரையும் கண்டுபிடித்துவிட்டது.

சஜத்பட்

2011-ம் ஆண்டு, பாகிஸ்தானின் ஆனந்தநாக் பகுதியைச் சேர்ந்த ஜலீல் அகமது ஹக்கானி என்பவருக்கு இந்த வேன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 7 முறை கைமாறி, கடைசியாக  சஜத்பட் என்பவரின் கைக்கு வேன் வந்தடைந்துள்ளது.  இவரும் ஆனந்தநாக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர். கடந்த பிப்ரவரி 4 -ம் தேதி, இந்த வேனை அவர் விலைக்கு வாங்கியுள்ளார். தாக்குதல் நடப்பதற்கு 10 நாள்களுக்கு முன்னர் அவர் வேனை வாங்கியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் போலீஸ் உதவியுடன் புலனாய்வு அமைப்பு சஜத் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது. ஆனால், வீட்டில் அவர் இல்லை. தலைமறைவாகிவிட்டார். அவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை விசாரித்து வருகின்றனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close