7 ஏக்கரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் அழிப்பு! | Indian jets destroy biggest camp of JeM in Balakot

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (26/02/2019)

கடைசி தொடர்பு:11:59 (26/02/2019)

7 ஏக்கரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் அழிப்பு!

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 200 முதல் 300 தீவிரவாதிகள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் அழிக்க பாய்ந்த மிராஜ்

அம்பாலா விமான தளத்தில் இருந்து  புறப்பட்ட மிராஜ் விமானங்கள்,  பயங்கரவாதிகளின் முகாம் மீது,  இலக்கை நோக்கி லேசர் வழிகாட்டுதலில் இயங்கும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. வீசப்பட்ட வெடிகுண்டுகள், இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பு ஆகும். பக்துன் கவா  மாகாணத்தில் உள்ள பாலகோட்டில் இயங்கிவந்த ஜெய்ஷ் இ முகமது முகாம் மிகப் பெரியது. 7 ஏக்கர் நிலத்தில் இந்த முகாம் அமைந்திருந்தது. இந்த முகாமை இந்திய விமானங்கள் துல்லியமாகத் தகர்த்து எறிந்தன. 

இந்தியாவின் 12 மிராஜ் - 2000 ரக விமானங்கள் ஒருங்கிணைந்து,  பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்கின. உடனடியாகப் பதிலடிக்கு பாகிஸ்தான் தயாராகியது. பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 ரக விமானங்கள் இந்திய விமானங்களை விரட்ட வந்தன. இந்திய  விமானங்களின் எண்ணிக்கையைக் கண்ட பாகிஸ்தான் விமானி, விமானத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டதாக, ஏ.என்.ஐ தன் செய்தியில் கூறியுள்ளது. 

பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, ட்ரோன் ஒன்றைப்  குஜராத்தின் கட்ச் பகுதிக்குள் பாகிஸ்தான் ஏவியது. அதை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்திய விமானப்படையின் பதில் தாக்குதலுக்கு, மேற்கு வங்க முதல்வர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஐ.ஏ.எஃப் என்றால், இந்தியாவின் அமேஸிங் ஃபைட்டர் என்று மம்தா குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தான், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close