குஜராத்தில் ட்ரோனை பறக்கவிட்ட பாகிஸ்தான்!‍ - மறு கணமே சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள் | Pakistani drone destroyed by Indian forces in Naliya village in Kutch, Gujarat

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (26/02/2019)

கடைசி தொடர்பு:13:36 (26/02/2019)

குஜராத்தில் ட்ரோனை பறக்கவிட்ட பாகிஸ்தான்!‍ - மறு கணமே சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

குஜராத் மாநிலத்தில் பறந்த பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

பாகிஸ்தான் ட்ரான்

photo credit: @RitaG74

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள்மீது 1000 கிலோ குண்டுகள் வீசப்பட்டன. இதில், பால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. 

இதை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ``இன்று இந்தியா தாக்கியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் ஆகும். இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த முகாமை வழிநடத்தியவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அன்சாரியின் மைத்துனர், மவுலான யூசஃப் அசார்” என்றார். 

ட்ரான்

photo credit: @RitaG74

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குஜராத் - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சர்வதேச எல்லையான கட்ச் பகுதியில், பாகிஸ்தானின் ட்ரோன் பறந்ததைப் பார்த்த அதிகாரிகள், அதை உடனே சுட்டு வீழ்த்தினர். தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ட்ரோன் குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close