`தேசமாக ஒன்றிணையும் நேரமிது!’ - உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்த அரவிந்த் கெஜ்ரிவால்! | Arvind Kejriwal postpones hunger strike

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (27/02/2019)

கடைசி தொடர்பு:07:56 (27/02/2019)

`தேசமாக ஒன்றிணையும் நேரமிது!’ - உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

ல்லையில் பதற்றம் நிலவிவருவதால், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வராகப் பதவி வகித்துவருகிறார். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி மார்ச் 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது போராட்டத்தை அவர் ஒத்திவைத்துள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக இந்திய விமானப் படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கப் பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனையடுத்து, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர்

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பாகிஸ்தான் தீவிரவாத இயக்கப் பயிற்சி முகாமை அழித்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு எனது `சல்யூட்’. தற்போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்தச் சமயத்தில் நாடு முழுவதும் ஒன்றாக இணையாக வேண்டியுள்ளதால், எனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவுசெய்துள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார். 
 


[X] Close

[X] Close