``இந்திய விமானங்களுக்குச் சிறு கீறல் கூட ஏற்படுத்த முடியவில்லையா?''- பாகிஸ்தானில் எழுந்த குமுறல் | not even a single Indian aircraft even got a scratch on them? pak journo asks

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:13 (27/02/2019)

``இந்திய விமானங்களுக்குச் சிறு கீறல் கூட ஏற்படுத்த முடியவில்லையா?''- பாகிஸ்தானில் எழுந்த குமுறல்

புல்வாமா தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலத் தரையில் தாக்குதலை எதிர்பார்த்து தயாராக இருந்தது. ஆனால், விமானப்படை ஏவப்பட்டதைப் பாகிஸ்தானால் கணிக்க முடியவில்லை.

பாகிஸ்தான் குமுறல்

பக்துன்வா மாகாணத்தில் பால்கோட் பகுதியில் மலையின் உச்சியின் 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையம் இருந்தது

 

பாக். அமைச்சர்கள் பேட்டி

மேற்கு மற்றும் மத்திய பிராந்திய விமானப்படைத் தளங்களிலிருந்து விமானங்கள் பறந்து சென்று தாக்கியிருக்கின்றன. எங்கேயிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதைப் பாகிஸ்தானால் புரிந்துகொள்ள முடியவில்லை. 12 மிராஜ் விமானங்களும் 4 பிரிவுகளாகப் பிரிந்து மூன்று இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சுகோய்-30 ரக விமானம் பாதுகாப்புக்குச் சென்றுள்ளது. ஆனால், மிராஜ் விமானங்கள் மட்டுமே தாக்குதலை நடத்தியுள்ளன. வானில் எரிபொருள் நிரப்பும் விமானமான ஐ.எல்-78 ரக விமானம் மட்டுமே பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. பிற விமானங்கள் அனைத்துமே காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.

இந்தியத் தாக்குதலையடுத்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பர்வேஸ் கட்டார்க் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரோஷி ஆகியோர் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், `நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா விமானப்படைத் தலைமையகத்துக்கு வந்தார். இங்கேதான் இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அனுமதிக்கும் திட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியும் விமானப்படைத் தளபதி முஜாகீத் அன்வர் கான் சேர்ந்து பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானங்களை அனுமதித்துள்ளனர்' என்று கேள்வி எழுப்பினார். 

ஜெய்ஷ் இ முகமது

இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி, `இது பொறுப்பற்ற குற்றச்சாட்டு. ராணுவத் தளபதியும் விமானப்படைத் தளபதியும் எந்த விதமான திட்டமிடலிலும் ஈடுபடவில்லை. நம் விமானப்படையைக் குறைத்து மதிப்பிட்டு விடவும் வேண்டாம். எல்லா நிலையிலும் பாகிஸ்தான் விமானப்படை தயாராக இருந்தது'' என்றார்.

பாகிஸ்தான் ரேடாரை இந்தியா ஜாம் செய்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, `அப்படியென்றால் எப்படி இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் விமானங்களால் விரட்ட முடிந்திருக்காதே' என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்தார். 

`உங்களால் ஒரு இந்திய விமானத்துக்குக் கூட சிறு கீறல் கூட ஏற்படுத்த முடியவில்லையா' என்று மற்றொரு பாகிஸ்தான் செய்தியாளர் குமுறினார். இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், `நீங்கள் ஒரு பாகிஸ்தானி. நான் உங்களிடம் தாழ்மையாக ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ராணுவ ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடையே உள்ளது. நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டாம். தக்க தருணத்தில் ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கப்படும்' என்று சமாளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close