`வீடியோ கேமா... வான்வெளித் தாக்குதலா?’ - போலிச் செய்திகளால் குழம்பிய இணையம்! #FakeNews | video game clipping spread as iaf attack

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (27/02/2019)

கடைசி தொடர்பு:15:32 (27/02/2019)

`வீடியோ கேமா... வான்வெளித் தாக்குதலா?’ - போலிச் செய்திகளால் குழம்பிய இணையம்! #FakeNews

இந்திய வான்படை எல்லைத்தாண்டி, தீவிரவாத முகாம்களை அழித்ததையடுத்து, இணையத்தில் தவறான படங்கள் மற்றும் வீடியோக்களுடன் போலிச்செய்திகள் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (26.2.2019) எல்லை கடந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது.

பாகிஸ்தானில் இயங்கிவரும் பிபிசி செய்தி நிறுவனம், தாக்குதல் நடந்த இடத்துக்குச் சென்று அங்குள்ளவர்களை விசாரித்தது. மிகப்பெரிய தாக்குதல் நடக்கவில்லை என்றும், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மட்டுமே கேட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
இதே நேரத்தில், இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதுதான் உண்மையான தாக்குதல் வீடியோ என நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் அது, `அர்மா’ என்ற வீடியோ கேம் என்பதை பூம்லைவ், யூ-டர்ன் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன. 2015-ல் இந்த வீடியோ கேம் குறித்த வீடியோக்கள் யூடியூப் தளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை மட்டும் தனியாக எடுத்து, இதுதான் தாக்குதல் நடந்த வீடியோ என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.

நிலநடுக்கம் போது எடுக்கப்பட்ட படங்கள்

புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்திலும், இதுபோன்ற போலிச் செய்திகள் இணையத்தில் அதிகம் வந்தன. தற்போது வான்வழித் தாக்குதல் நடந்த பிறகு, இதுபோன்ற போலிச் செய்திகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதில் உச்சகட்டமாக, இந்த வான்வழித்தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டு வீழ்த்தப்பட்டார் என்றும் கூறப்பட்டது. 2013-ல் எடுக்கப்பட்ட இம்ரான் கான் புகைப்படத்தைத் தற்போது நடந்ததாகக் கூறியும், இந்தச் சம்பவத்தில் அவர் சுடப்பட்டார் என்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆனால், உண்மையில் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை.

                                                       போலிச் செய்தி - வீடியோ கேம் படம்

இதேபோல் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டு, தற்போது நடந்த தாக்குதலில் எடுத்தப் படங்கள் என்று பகிர்ந்து வருகிறார்கள். எதையும் உறுதி செய்யாமல், செய்திகளைப் பரப்புவதால் தேவையற்ற வதந்திகள்தான் உருவாகும்.


[X] Close

[X] Close