``இனி டாக்டர் ஹதியா அசோகன் என்று அழைக்கப்படுவார்!''- கணவர் நெகிழ்ச்சி | Hadiya finishes her doctor degree

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (28/02/2019)

கடைசி தொடர்பு:14:10 (28/02/2019)

``இனி டாக்டர் ஹதியா அசோகன் என்று அழைக்கப்படுவார்!''- கணவர் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் அசோகன். இவரின் மகள் அகிலா என்ற ஹதியா. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் படித்து வந்தார். அகிலாவுக்கும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஃபீன் ஜகான் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து, அகிலா தன் பெயரை ஹதியா என்று மாற்றிக் கொண்டு ஷாஃபீன் ஜகானை திருமணம் செய்து கொண்டார். இதற்கு அகிலாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஹதியா

கேரள உயர்நீதிமன்றத்தில் ஷாஃபின் ஜகானுக்கும் ஹதியாவுக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி தந்தை அசோகன்  வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் திருமணம் செல்லாது' என்று அசோகனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஷாஃபீன் ஜகான் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். உச்சநீதிமன்றம் கேரள உயர்நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது. ஹதியா தன் முழு விருப்பத்துடன்தான் ஷாஃபீர் ஜகானைத் திருமணம் செய்துள்ளார் என்று அறிவித்ததோடு கணவரின் பராமரிப்பில் அவர்  செல்லலாம் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து சேலத்தில் சித்த மருத்துவப் படிப்பையும் ஹதியா தொடர்ந்து படித்து முடித்தார். சேலத்தில் தமிழ்நாடு போலீஸ் அவருக்குத் தேவையான பாதுகாப்பையும் அளித்தது. 

கணவருடன் அகிலா

பல்வேறு போராட்டங்களைத் தாண்டி, தன் டாக்டர் படிப்பை ஹதியா முடித்துவிட்டார். இது குறித்து ஷாஃபீர் ஜகான் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், மதங்களைத் தாண்டி அன்புடனும் பொறுமையுடனும் இருந்த ஹதியா இனிமேல் `டாக்டர். ஹதியா அசோகன் 'என்று அழைக்கப்படுவார் ''என்று கூறியுள்ளார்.

பெயருக்குப் பின்னால் அவரின் தந்தையின் பெயரை ஷாஃபீன் ஜகான் சேர்த்து எழுதியிருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close