``பழங்குடிகள் வெளியேற்றத்துக்குத் தற்காலிக தடை!" -உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme court stays the tribal eviction order after the plea filed by Central government

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (28/02/2019)

கடைசி தொடர்பு:14:35 (28/02/2019)

``பழங்குடிகள் வெளியேற்றத்துக்குத் தற்காலிக தடை!" -உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 13-ம் தேதி இந்தியக் காடுகளில் வாழும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடிகள் வெளியேற்றப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். பல்வேறு காலகட்டங்களில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளைத் தொகுத்து ஒன்றாக விசாரித்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பழைய சிங்கம்பட்டி ஜமீன்தார், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள், பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் சில காட்டுயிர்ப் பாதுகாப்பு அமைப்புகள் இந்த வழக்குகளைத் தொடுத்திருந்தன.

பழங்குடிகள்

இந்திய வன உரிமைச் சட்டத்தை அரசியலமைப்பு ரீதியாகக் கேள்விக்குள்ளாக்கி தொடரப்பட்ட வழக்குகள்தாம் இவை. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு இவற்றைக் கடந்த 13-ம் தேதி விசாரித்தது. அதில், முதலில் அவர்கள் அந்தச் சட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கி முன்வைக்கப்பட்ட வாதத்தைத்தான் விசாரித்திருக்கவேண்டும். ஆனால், அந்த வழக்கில் உரிமை கோரி பழங்குடிகள் கொடுத்த மனுக்கள் மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்று மனுதாரர்கள் புதிய கோரிக்கைகளை வைத்திருந்தனர். அதை முதலில் விசாரித்ததோடு, அவர்களை வரும் ஜூலை-27-ம் தேதிக்குள் வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் மத்திய அரசு இதுவரை அமைதி காத்துவந்தது. ராகுல் காந்தியின் உந்துதலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் இதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து மத்திய அரசும் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இன்று அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த 13-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு சட்டபூர்வமாகத் தடை விதித்தனர். இதனால், லட்சக்கணக்கான பழங்குடிகள் தம் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவது தடுக்கப்படுகிறது.


[X] Close

[X] Close