`உங்களுக்கு ஒரு கன்னட பிரதமர் கிடைக்கலாம்!’ - குமாரசாமி கருத்தால் காங்கிரஸ் அதிர்ச்சி | Karnataka CM speech regarding PM candidate

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (28/02/2019)

கடைசி தொடர்பு:14:55 (28/02/2019)

`உங்களுக்கு ஒரு கன்னட பிரதமர் கிடைக்கலாம்!’ - குமாரசாமி கருத்தால் காங்கிரஸ் அதிர்ச்சி

கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குமாரசாமி

ஒருபுறம் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவர, மறுபுறம் நாட்டில் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் தங்களைத் தயார் செய்து வருகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கருத்து காங்கிரஸ் கூட்டணியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்,  ``நீங்கள் (கர்நாடக வாக்காளர்கள்) காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளுக்கு 20 முதல் 22 இடங்கள் வரை வெற்றிபெறச் செய்தால், கன்னடம் பேசும் ஒருவர் கூட பிரதமராக வரலாம். இந்த நாட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்படியிருக்க இது ஏன் நடக்காது?” எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கூட்டணி இதுவரை பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், குமாரசாமி கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அதன் காரணமாக குமாரசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close