`மிராஜ் சிங்’ - இந்திய விமானப்படைத் தாக்குதல் நினைவாகப் பெயரிடப்பட்ட குழந்தை! | Newborn baby named Miraj Singh Rathore

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (28/02/2019)

கடைசி தொடர்பு:16:35 (28/02/2019)

`மிராஜ் சிங்’ - இந்திய விமானப்படைத் தாக்குதல் நினைவாகப் பெயரிடப்பட்ட குழந்தை!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியான பாலகோட்டில், கடந்த செவ்வாயன்று மிராஜ் 2000 வகை விமானங்களைக்கொண்டு இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. அதன் நினைவாக, ஒரு குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

மிராஜ்

பாலகோட் தாக்குதலை இந்தியாவிலுள்ள பலரும் பலவிதங்களில் கொண்டாடிக் களித்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், இதைக் கொண்டாடுவதற்காக அன்றைய தினம் மட்டும், இலவசமாக ஏற்றிச்சென்றனர். பல வியாபார நிறுவனங்களில் சலுகை விலையில் விற்பனை நடந்தது. ஸ்வீட் ஸ்டால்களில் இலவசமாக இனிப்புகள் வழங்கப்பட்டன. 

இதேபோல ஒரு தந்தை செய்த செயல், அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நகவுர் மாவட்டம், தாப்ரா கிராமத்தைச் சேர்ந்த மகாவீர் சிங் - சோனம் சிங் தம்பதியினருக்கு பாலகோட்டில் நமது விமானப்படைத் தாக்குதல் நடத்திய அதே நாளில், அதிகாலை 3.50 மணிக்கு குழந்தை பிறந்தது. தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்ட அதிகாலை 3.30 மணிக்குத்தான் விமானத் தாக்குதல் நடந்திருந்தது. குழந்தையின் மாமா, இந்திய விமானப்படையில், நைனிடால் பகுதியில் பணியாற்றி வருகிறார். தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்ட அதே நேரத்தில்தான் பாலகோட் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை அறிந்த குழந்தையின் மாமா, அந்த விமானத்தின் பெயரிலேயே மிராஜ் சிங் ரத்தோர் என்ற பெயரைத் தேர்வு செய்தார். மகாவீர் சிங் - சோனம் சிங் தம்பதியினரும் முழுமனதோடும் மகிழ்வோடும் அந்தப் பெயரைச் சூட்டி தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். இந்தப் பெயர்சூட்டப்பட்ட செய்தி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close