``அபிநந்தனை திரும்ப அனுப்புகிறோம்; பதற்றத்தைக் குறையுங்கள்!''- பாகிஸ்தான் | Pak says ready to return IAF pilot

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (28/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (28/02/2019)

``அபிநந்தனை திரும்ப அனுப்புகிறோம்; பதற்றத்தைக் குறையுங்கள்!''- பாகிஸ்தான்

``பிநந்தனை திருப்பி அனுப்புவதன் மூலம் பதற்றம் குறையுமாயின் அந்த முடிவைப் பரிசீலிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அனைத்துவிதமான சுமூக பேச்சுவார்த்தைக்கும் பாகிஸ்தான் தயார்'' என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாக், ராணுவத்திடம் சிக்கிய விமானி

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது எனவும் இந்தியா கூறியுள்ளது. அதேவேளையில் அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்றால் பாலகோட்டில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதல் நடத்தமாட்டோம் என்று இந்தியா உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``இந்திய மக்களுக்குப் பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு என்பதை நாங்கள் தெரியப்படுத்துவோம். அபிநந்தனுக்கும் எங்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதம் கிடையாது, ஜெனிவா ஒப்பந்தத்தை நாங்கள் பின்பற்றுவோம். அபிநந்தனை நாங்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா அபிநந்தனை உடனடியாக அனுப்ப வேண்டுமென்று கூறுகிறதே என்று கேட்டபோது, 'இந்த விவகாரத்தைத் திறந்த மனதுடன் அணுகத் தயாராக இருக்கிறோம்' என்று குரோஷி பதில் அளித்தார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜூல்ஃபிகர் அலி பூட்டோவின் பேத்தியும்,  இம்ரான்கான் அரசு உடனடியாக இந்திய விமானியை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close