`அபிநந்தன் தொடர்பான வீடியோவை நீக்குங்கள்!’- யூடியூப்புக்கு மத்திய அரசு உத்தரவு | IT Ministry asks YouTube to remove video links of IAF pilot

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:54 (28/02/2019)

`அபிநந்தன் தொடர்பான வீடியோவை நீக்குங்கள்!’- யூடியூப்புக்கு மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான வீடியோவை நீக்கவேண்டும் என மத்திய அரசு யூடியூப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

அபிநந்தன்


பால்கோட் தாக்குதலை அடுத்து இன்று இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதி எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்தது. அதில் இருந்த விமானி அபிநந்தன் வர்த்தன் என்பவரைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவர்களிடமிருந்து விமானியைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டு கைது செய்தனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து விமானி அபிநந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விமானியிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, முதலில் அவர் பெயர் என்ன உள்ளிட்ட விவரங்களை கேட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் எனக் கேட்க, அதற்கு ``ஆம், இங்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள். என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள்” என்று பேசிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் பலரும் பகிர்ந்தனர்.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில், `அபிநந்தன் வீடியோவை நீக்கவேண்டும் என்று கூறி யூடியூப்புக்குக் கட்டளையிட்டுள்ளது. இதுதொடர்பாக யூடியூப் செய்திதொடர்பாளர் கூறுகையில், `சம்பந்தபட்ட அதிகாரிகளிடமிருந்து வந்த கோரிக்கை மற்றும் எங்களின் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் அந்த வீடியோவை நீக்க உள்ளோம்” என்றார்.
 


[X] Close

[X] Close