`இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: தேவைப்பட்டால் போன்கள் ஒட்டுக்கேட்கப்படும்!' | India-Pakistan tension: Telcos bracing to intercept calls if needed

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:58 (28/02/2019)

`இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: தேவைப்பட்டால் போன்கள் ஒட்டுக்கேட்கப்படும்!'

ந்தியா - பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்தைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் சந்தேக நபர்களின் போன்களை அரசு ஒட்டுக்கேட்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

போன் ஒட்டுக்கேட்பு

புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. 

இத்தகைய சூழலில், அயல் நாடுகளிலிருந்து குறிப்பிட்ட தடங்கள் வழியாக வரும் அழைப்புகளைக் கண்காணிப்பது மற்றும் சந்தேக நபர்களின் போன் உரையாடல்களை இடைமறித்தது ஒட்டுக்கேட்பது அரசுக்கு அவசியமானதாக இருக்கும். எனவே, அதுபோன்ற சூழலில் அரசிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அப்படி வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில் தொலைபேசி நிறுவனங்கள் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். 

அரசு தரப்பிலிருந்தோ அல்லது ராணுவ தரப்பிலிருந்தோ இது தொடர்பாக கோரிக்கை வந்தால், அதை நிறைவேற்றுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்க இயக்குநர் ராஜன் மாதேவ் தெரிவித்துள்ளார். 

இதுதவிர, அநாவசிய வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, குறிப்பிட்ட இடங்களில் இணையதள சேவைகளைத் தற்காலிகமாக முடக்குமாறும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டால், அதையும் டெலிகாம் நிறுவனங்கள் செய்துதான் ஆக வேண்டும். அதே சமயம் இதுவரை எந்தவோர் இடத்திலும் இணையதள சேவைகளை நிறுத்தும்படியோ அல்லது தற்காலிகமாக முடக்கும்படியோ அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு வேண்டுகோள் எதுவும் வரவில்லை என இந்திய இணையதள சேவைகள் வழங்குவோர் சங்கத் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித்துள்ளார். 

செல்போன் டவர்

முன்னதாக,  பயங்கரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை இணைய தள மெயில்கள் மூலம் பரிமாறிக் கொள்வதை தடுப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் பதிவுகளையும் உளவு பார்க்கும் கூடுதல் அதிகாரத்தைப் புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அரசு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close