``எனது கருத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்!” -சர்ச்சை கருத்துக்கு எடியூரப்பா விளக்கம் | BS Yeddyurappa left red faced as pak media taunts his video on winning 22 lok sabha seats in karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:24 (16/03/2019)

``எனது கருத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்!” -சர்ச்சை கருத்துக்கு எடியூரப்பா விளக்கம்

 

 

காஷ்மீர் குறித்து எடியூரப்பா

எல்லையில் சமாதானம் ஆனாலும் கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா சமாதானமாவது போல இல்லை என்றே தெரிகிறது. காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே சூழல் பதற்றமாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்திடம் இருக்கும் இந்திய விமான வீரர் அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் ``பாகிஸ்தான் மீதான விமானத் தாக்குதல் நமக்கு கர்நாடகாவில் 22 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை உறுதிபடுத்தியிருக்கிறது” என அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியிருக்கிறார்.

இந்திய மக்கள் அனைவருமே #SayNoToWar  எனக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் எடியூரப்பாவின் இந்த வெளிப்படையான பேச்சு மக்களை முகம் சுளிக்கவைத்துள்ளது. மேலும், அவரின் இந்தத் தடாலடி பேச்சு இந்திய ஊடகங்களால் பேசப்பட அதனை பாகிஸ்தான் ஊடகங்களும் தங்கள் செய்திகளாக்கி வருகின்றன. இதற்கிடையே கர்நாடக முதல்வர் குமாரசுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒட்டுமொத்த தேசமே தீவிரவாதத்துக்கு எதிராக நிற்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா தலைவர் மட்டும் தேர்தல் வெற்றி குறித்து கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று கருத்து கூறியுள்ளார். தனது பேச்சுக்கு விளக்க அறிக்கை விடுத்துள்ள எடியூரப்பா, ``நான் நமது நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதனை நான் தேர்தல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை. பி.ஜே.பியின் வெற்றி குறித்து நான் பலமுறை பேசியிருக்கிறேன். மக்கள் இதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்று கூறியிருக்கிறார். 

அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் சமயம் எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய விவகாரத்தில் எடியூரப்பா மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close