``அபிநந்தனை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்!” - 'கார்கில்' நச்சிகேட்டா | we are all proud of him - Nachiketa

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (01/03/2019)

கடைசி தொடர்பு:13:57 (01/03/2019)

``அபிநந்தனை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்!” - 'கார்கில்' நச்சிகேட்டா

அபிநந்தன் தாயகம் திரும்புவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கார்கில் போரின் போது பாகிஸ்தான் சிறையிலிருந்து திரும்பிய நச்சிகேட்டா கூறியுள்ளார்.

அபிநந்தன்

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இன்று விடுவிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி இன்று அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் அபிநந்தனை லாகூருக்கு அழைத்து வரப்படவுள்ளதாகும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்துவரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நச்சிகேட்டா

அபிநந்தன் தாயகம் திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாக கார்கில் போரின் போது பாகிஸ்தானில் சிறைவாசம் இருந்து திரும்பிய நச்சிகேட்டா கூறியுள்ளார். கார்கில் போரின்போது இந்திய விமானப்படை விமானி நச்சிகேட்டா பாகிஸ்தான் வீரர்களால் பிடித்துச்செல்லப்பட்டார். சிறிது காலம் அங்கு சிறைவாசம் அனுபவித்தவர். கார்கில் போரில் பிடிபட்ட ஒரே இந்திய வீரர் இவர்தான். ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள நச்சிகேட்டா, ``விமானியின் இதயம் எப்போதும் தனது இருக்கையில்தான் இருக்கும். இந்த இரண்டு நாள்களில் அபிநந்தன் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பார். அவர் தாயகம் திரும்புவது மகிழ்ச்சியே. இந்திய அரசாங்கமும், விமானப்படையும் அவரை விரைவாக இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். கடந்த இரண்டு நாள்களாக அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்காகப் பிரார்த்திக்கிறேன். அபி ஒரு தைரியமான விமானி. அவரை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


[X] Close

[X] Close