`தேர்தல் வந்தால் போர் வரும் என பா.ஜ.க அப்போதே சொன்னது!' - பவன் கல்யாண் பேச்சால் சர்ச்சை | BJP told me of the war before LS polls says Pawan Kalyan

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:28 (16/03/2019)

`தேர்தல் வந்தால் போர் வரும் என பா.ஜ.க அப்போதே சொன்னது!' - பவன் கல்யாண் பேச்சால் சர்ச்சை

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை ஒட்டி இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இப்போதிலிருந்தே பிரசாரங்களைத் தொடங்கிவிட்டனர். தற்போது தலைவர்கள் தாங்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் நடவடிக்கை போன்ற பிரச்னைகள் குறித்தே அதிகமாகப் பேசுகின்றனர்.

பவன் கல்யாண்

இதற்கிடையில் தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று கடப்பா மாவட்டத்தில் தன் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘ஆந்திராவின் மற்ற மாவட்டங்களுடன் ராயல்சீமாவை ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கிய நிலையிலேயே அதன்  வளர்ச்சி உள்ளது. தேவையான பலத்துடன் என்னை நீங்கள் சட்டமன்றத்துக்கு அனுப்பினால் தற்போதைய ராயல்சீமாவின் நிலையை நான் மாற்றியமைப்பேன். இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன்’ எனப் பேசினார்.

இதையடுத்து, புல்வாமா தாக்குதல் தொடர்பாகப் பேசிய அவர், ‘நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் போர் வரும் என பா.ஜ.க அப்போதே என்னிடம் கூறியது. இதைத்தான் நானும் இரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தேன். எந்தப் பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என நான் அவர்களுக்குப் பதில் அளித்தேன்’ எனக் கூறியுள்ளார். இவரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close