``பிப்ரவரி 14-க்குப் பிறகு எதுவும் பாதிப்பதில்லை!''- போரை எதிர்த்த சி.ஆர்.பி.எஃப் வீரர் மனைவி | Wife Of Killed Soldier Says "Nothing Affects Me After my husband died ''

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:30 (01/03/2019)

``பிப்ரவரி 14-க்குப் பிறகு எதுவும் பாதிப்பதில்லை!''- போரை எதிர்த்த சி.ஆர்.பி.எஃப் வீரர் மனைவி

டந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்மாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பலியான வீரர்களுள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாலு சந்திரா என்பவரும் ஒருவர். இதனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்குள் பாலகோட் பகுதியில் அமைந்திருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையத்தை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. பாகிஸ்தானும் பதிலுக்கு தாக்குதல் நடத்த, போர் மூண்டு விடும் நிலை ஏற்பட்டது. . 

சி.ஆர்.பி.எப்

இந்த நிலையில், பாலு சந்திராவின் மனைவி மிடா , ``பாகிஸ்தானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். போர் ஏற்பட்டால் ஏராளமான உயிர்ப்பலி ஏற்படும். பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விங் கமாண்டர் அபிநந்தனை  மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் '' என்று கூறினார். இதனால் சமூகவலைதளங்களில் சிலர் மிடா சந்திராவை கேலி செய்தனர். ``நீங்கள் உண்மையிலேயே உங்கள் கணவரை நேசித்தீர்களா எனக் கேள்வி எழுப்பி அவரைப் புண்படுத்தினர்.

சமூகவலைதளங்களில் எழுந்த கேள்விகள் குறித்து கருத்து தெரிவித்த மிடா ``சிலர் வீட்டுக்குள் இருந்துகொண்டு ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டிருப்பார்கள். ராணுவத்தில், கடற்படையில், விமானப்படையில் அவர்கள் வீட்டில் யாராவது இருந்தால் இப்படிச் சொல்வார்களா. பிப்ரவரி 14-ம் தேதிக்குப் பிறகு என்னை எதுவுமே பாதிப்பதில்லை. என்ன வேண்டுமென்றாலும் பேசிவிட்டு போகட்டும்'' என்று பதில் அளித்துள்ளார்.

புல்மாவா தாக்குதல்

மிடா சந்திராவுக்கு 6 வயது மகள் உள்ளார். தற்போது, தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். மேற்கு வங்க அரசு அவருக்கு அரசுப் பணி வழங்க முன்வந்துள்ளது  மிடாவுக்கு சி.ஆர்.பி.எஃப்-பிலும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மிடா இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close