`அது அவர்களின் குடும்ப விமானம்' - MiG - 21 ரகமும்... அபிநந்தனின் குடும்ப ஒற்றுமையும்... | flying the MiG-21 fighter aircraft is a sort of family tradition of Varthamans

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (01/03/2019)

`அது அவர்களின் குடும்ப விமானம்' - MiG - 21 ரகமும்... அபிநந்தனின் குடும்ப ஒற்றுமையும்...

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 27-ம் தேதி காலை இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் F-16 விமானம் பறந்தது. இதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானம் MiG - 21-ல் பறந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் சிக்கிக்கொண்டார். இரண்டு நாள்களுக்குப் பிறகு  இன்று மாலை அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிம்மக்குட்டி வர்த்தமானின் நண்பரும் முன்னாள் விங் கமாண்டருமான பிரகாஷ் நாவலே, அபிநந்தன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பி.டி.ஐ ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘ தேசிய பாதுகாப்பு அகாடமியில் 1969 முதல் 1972 -ம் ஆண்டு வரை நானும் சிம்மக்குட்டி வர்த்தமானும் கோர்ஸ் மெட்டாக இருந்தோம். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஹாகிம்பெட்டில் போர் விமானியாக இணைந்தே பயிற்சி பெற்றோம். அதன் பிறகு போர் விமானியில் இருந்து ஹெலிகாப்டர் இயக்க மாற்றப்பட்டோம். அதிலிருந்து இருவரும் இணைந்து விமான பயிற்றுநர்களாக சில காலங்கள் பணிபுரிந்தோம். 

நாங்கள் போர் விமானியாக இருந்தபோது, தற்போது அபிநந்தன் இயக்கிய அதே MiG - 21 விமானத்தை அவரின் தந்தையும் இயக்கினார். அது அவர்களின் குடும்ப விமானமாகவே மாறிவிட்டது. அதற்கு முன்னதாக அபிநந்தனின் தாத்தாவும் இதே இந்திய விமானப் படையில் இருந்துள்ளார். 

ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமானும் அவரின் மனைவியும் நல்ல மனிதர்கள். நான் பலமுறை அவரது வீட்டுக்குச் சென்று உணவருந்தியுள்ளேன். அவர் என்னையும் என் மனைவியையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே பாவிப்பார். அப்போதிலிருந்தே அபிநந்தனையும் எனக்கு நன்றாகத் தெரியும். மிகவும் அமைதியானவர், திறமையானவர். 


[X] Close

[X] Close