இறந்ததைப்போல நடித்த தீவிரவாதி; பறிபோன சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிர் - ஜம்முவில் மற்றுமொரு சோகம்! | Four security personnel and one civilian lost their lives in Kupwara encounter

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (02/03/2019)

கடைசி தொடர்பு:18:45 (02/03/2019)

இறந்ததைப்போல நடித்த தீவிரவாதி; பறிபோன சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிர் - ஜம்முவில் மற்றுமொரு சோகம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 வீரர்கள் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

தீவிரவாதி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. நம்பகமான தகவல் என்பதால், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து காஷ்மீர் போலீஸார் பாபாகுண்ட் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கிருந்து மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்புப் படையினரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நீட்டித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் குடிமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

அதன்படி நாசீர் அகமது கோலி மற்றும் குலாம் முஸ்தபா பாரா என்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளும், பிந்து, வினோத் என்ற 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்களும், வாசீம் அகமது மிர் என்ற கிராமவாசியும் பலியானார்கள். இதற்கிடையே, இந்தத் தாக்குதல் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் குறித்து பேசியுள்ள பாதுகாப்பு அதிகாரி ``நேற்று காலை முதலே தாக்குதல் நடந்தது. இதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

நாள் முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது குறிப்பிட்ட நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை நிறுத்தினர். துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி மரணமடைந்துவிட்டார் என எண்ணி அவரது உடலை மீட்க வீரர்கள் வீட்டுக்குள் சென்றனர். அப்போது இறந்ததுபோல் நடித்த தீவிரவாதி, வீட்டுக்குள் வீரர்கள் நுழைந்ததும் அவர்களைச் சுட்டான். இதில் இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் அந்தத் தீவிரவாதி சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்டான்" என்றனர். தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்டுள்ள தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close